மாநில அளவிலான இறகு பந்து போட்டி: கோவை முதலிடம்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 06:09 pm
state-level-wing-ball-match

சேலம் மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் கோவையை சேர்ந்த கணேஷ், கவின் ஆகியோர் முதல் பரிசை வென்றனர். 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் தைப்பொங்கலை முன்னிட்டு, எடப்பாடி இறகுப்பந்து நண்பர் குழு சார்பில்  மாநில அளவிலான ஆண்கள் இரட்டையர் இறகு பந்து போட்டி நடைபெற்றன. இதில் சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 80 அணிகள் பங்கேற்றன. 

இறுதிப்போட்டியில், கோயம்புத்தூரை சேர்ந்த கணேஷ், கவின் ஆகியோர் வெற்றி பெற்று முதலிடத்தை தட்டி சென்றனர். தொடர்ந்து கோவையை சேர்ந்த ஜெயபிரகாஷ், ஆசிப் இரண்டாம் பரிசையும்,எடப்பாடியை சேர்ந்த குமார், யுவராஜ் மூன்றாம் பரிசையும், சேலத்தை சேர்ந்த பாபு, வெங்கடேஷ் நான்காம் பரிசையும் வென்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close