மாநில பளுதூக்கும் போட்டி: சேலம் ஒட்டுமொத்த சாம்பியன்..!

  டேவிட்   | Last Modified : 21 Jan, 2019 11:01 am
state-weightlifting-salem-won-overall-championship

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜுனியர் பளுதூக்கும் போட்டியில் சேலம் மாவட்ட ஆடவர் மற்றும் மகளிர் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றன. 

கோவை, நேரு டெக்னாலஜி கல்லூரியில் கடந்த 19 மற்றும் 20ஆம் தேதி மாநில அளவிலான ஜுனியர் பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்ட அணிகள் பங்கேற்றன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் சேலம் மாவட்ட ஆடவர் மற்றும் மகளிர் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளன. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close