உலக அளவிலான செஸ் போட்டி: திருச்சி மாணவன் 3ம் இடம்..!

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 10:54 am
international-chess-tournament-trichy-student-3rd-place

டெல்லியில் நடைபெற்ற உலக அளவிலான  செஸ் போட்டியில் வெற்றி பெற்று  3ஆம் இடம் பிடித்த  12ம் வகுப்பு மாணவன் ரிஷிக்கு அவருடைய பள்ளியில் இன்று  பாராட்டு விழா நடைபெற்றது. 

திருச்சி மாவட்டம் மாணப்பாறையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் ரிஷி. இவருக்கு செஸ் போட்டியில் அதிகம் ஆர்வம் என்பதால், இவர் மாவட்டம், மண்டலம், மாநிலம், அகில இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஜனவரி 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொண்ட ரிஷி, 3ஆம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 1530 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து ஊர் திரும்பிய ரிஷிக்கு இன்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து மாணவனை கௌரவித்து ஊக்கப்படுத்தினர். மேலும் மாணவ, மாணவிகளும் கை தட்டி தங்களின் மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி, தன்னுடைய தந்தை தான்  தனக்கு செஸ் பயிற்சியாளராக உள்ளதாகவும், உலக அளவில் முதலிடம் வர வேண்டும் என்பது தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close