அகில இந்திய தடகளப் போட்டி: கோவை மாணவன் தங்கம் வென்று அசத்தல்..!

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 03:30 pm
coimbatore-student-is-win-the-gold-medal

உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற அகில இந்திய தடகள போட்டியில் கோவையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் சதீஷ்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 

உத்திரப்பிரதேசம், மதுரா மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் 53 -வது அகில இந்திய தடகள போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், 18 வயதினருக்கான 6 கி.மீ ஓட்டப்போட்டியில், கோவை ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி மாணவன் சதீஷ்குமார் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். 

தனது வெற்றிக்கு பயிற்சியாளர் வைரவநாதன் தான் காரணம் எனவும், தனது கனவை நோக்கிப் பயணிக்க நம்பிக்கை அளிப்பவர் அவர் தான் எனவும் மாணவன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 2018 -ம் ஆண்டில் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான ஒட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close