தேசிய எறிபந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி அறிவிப்பு !

  டேவிட்   | Last Modified : 28 Jan, 2019 10:42 am
federation-cup-throwball-tamilnadu-teams-announced

ராஜஸ்தானில் நடைபெறவுள்ள பெடரேஷன் கோப்பைக்கான எறிபந்து போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக எறிபந்து வீரர், வீராங்கனைகளின் பெயர்பட்டியலை தமிழ்நாடு எறிபந்து சங்கம் வெளியிட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் சஹாபுரா மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 1 முதல் 3 வரை பெடரேஷன் கோப்பைக்கான தேசிய எறிபந்து போட்டி நடைபெறவுள்ளது. தமிழகம் சார்பில் பங்கேற்றவுள்ள வீரர், வீராங்கனைகளின் பட்டியலை தமிழ்நாடு எறிபந்து சங்கம் அறிவித்துள்ளது. ஆடவர் அணியின் கேப்டனாக கரூரைச் சேர்ந்த விக்னேஷ், மகளிர் அணியின் கேப்டனாக சென்னையைச் சேர்ந்த வர்ஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

14 வீரர்களும், 14 வீராங்கனைகளும் இதில் பங்கேற்கின்றனர். ஆடவர் அணிக்கு சென்னையைச் சேர்ந்த முத்துராசு பயிற்சியாளராகவும், கோவை நிரேஷ் மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மகளிர் அணிக்கு கீதா பயிற்சியாளராகவும், யாமினி மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close