புரோ வாலிபால் லீக்: கொச்சியில் பிப்.2-ல் தொடக்கம் - வாலிபால் ரசிகர்கள் மகிழ்ச்சி !

  டேவிட்   | Last Modified : 28 Jan, 2019 11:40 am
pro-volleyball-league-commencing-from-feb-2-at-kochi

இந்தியாவில் முதன்முறையாக புரோ வாலிபால் லீக் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி கொச்சியில் கோலாகாலமாக, வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கவுள்ளது.

இந்திய கைப்பந்து சம்மேளம், பேஸ்லைன் வென்ச்சர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் புரோ கைப்பந்து லீக் ஆகியவை இணைந்து, இந்தியாவில் முதன்முறையாக ”புரோ வாலிபால் லீக்” போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கடந்த 2008 ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டது. இதற்கு கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து, ஹாக்கி, பேட்மிண்டன், கபடி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றியடைந்து வருகின்றன. இதன் வரிசையில் தற்போது கைப்பந்து இணைந்துள்ளது.  
 
புரோ வாலிபால் லீக் போட்டிகள் வரும் 2ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடைபெறவுள்ளது.  பிப்ரவரி 2ஆம் தேதி கொச்சியில் கோலாகாலமாக, வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கவுள்ளது. 2ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை கொச்சியிலும், 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சென்னையிலும் நடைபெறவுள்ளது. 

இந்தப் போட்டியில் கொச்சி ப்ளு ஸ்பைக்கர்ஸ், பிளாக் ஹாக்ஸ் ஹைதராபாத், அகமதாபாத் டிஃபென்டர்ஸ், சென்னை ஸ்பார்டன்ஸ், காலிகட் ஹீரோஸ், யு மும்பா வாலி ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளுக்கான வீரர்களின் ஏலம் வரும் கடந்த டிசம்பார் மாதம் 13, 14 தேதிகளில் நடைபெற்றது. ஒரு அணியின் 12 வீரர்களில், 2 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நட்சத்திர வீரரும், 21 வயதுக்குட்பட்ட 2 இளம் வீரர்களும் இதில் அடங்குவர். 

கொச்சியில் வரும் 2ஆம் தேதி நடைபெறவுள்ள துவக்க விழாவைத் தொடர்ந்து முதல் ஆட்டத்தில் கொச்சி ப்ளு ஸ்பைக்கர் அணி, யு-மும்பா அணியை எதிர்கொள்கிறது. இரண்டாவது ஆட்டத்தில் காலிகட் ஹீரோஸ் அணி, சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியுடன் மோதுகின்றது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close