அகில இந்திய பளுதூக்கும் போட்டி: வெள்ளி வென்ற தமிழக வீரர் !

  டேவிட்   | Last Modified : 31 Jan, 2019 07:30 pm
salem-weighlifter-won-silver-in-the-all-india-civil-services-weightlifting-championship

சத்தீஸ்கரில் நடைபெற்ற அகில  இந்திய சிவீல் சர்வீசஸ்கான பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் அனீஷ்குமார் ஒட்டுமொத்தமாக 223 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். 

அகில  இந்திய சிவீல் சர்வீசஸ்கான பளுதூக்கும் போட்டி  சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்பூரில் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சேலத்தை சேர்ந்த வீரரும், தருமபுரி கோட்டத்திலுள்ள தபால் துறையில் பணிபுரியும்  ஜி.பி.அனீஷ்குமார், இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 94 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு ஒட்டுமொத்தமாக 223கிலோ எடை தூக்கி  வெள்ளி பதக்கம் வென்றார். இவரை  சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்கம் சார்பாக  வரவேற்று வாழ்த்துக்கள்  தெரிவித்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close