பெடரேஷன் கோப்பைக்கான எறிபந்து போட்டி: தமிழக பெண்கள் அணி வெற்றி

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 04:24 pm
29th-federation-cup-throw-ball-championship

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் பெடரேஷன் கோப்பைக்கான எறிபந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழக பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் 29வது பெடரேஷன் கோப்பைக்கான எறிப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது.  நேற்று (பிப்.1) தொடங்கிய இந்த போட்டியில், தமிழ்நாடு, கர்நாடக, ராஜஸ்தான், புதுச்சேரி, உத்தரகாண்ட், குஜராத் உள்ளிட்ட 9 மாநிலங்களை சேர்ந்த அணிகள்  கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இதில் நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் தமிழக பெண்கள் அணி, மேற்கு வங்க அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 15-10, 16-14 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து மத்திய பிரதேச அணிகளுடன் மோதிய தமிழக அணி, 15-10, 15-12 என்ற கணக்கில் மத்தியப்பிரதேச அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன்சிங் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்குகோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கவுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close