புரோ வாலிபால்: சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தோல்வி

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 10:59 am
chennai-spartans-team-loss-in-pro-volleyball-match

கொச்சியில் நடைபெற்ற புரோ வாலிபால் போட்டியில் கேரளா அணியுடன் மோதிய சென்னை ஸ்பார்டன்ஸ் அணி போராடி தோற்றது. 

கொச்சி ராஜூவ் காந்தி மைதானத்தில், ரூபே புரோ வாலிபால் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கேராளாவின் காலிகட் ஹீரோஸ் அணியுடன் மோதியது. தொடக்கத்தில் சென்னை மற்றும் கேரளா அணிகள் மாறி, மாறி புள்ளிகளை எடுத்தாலும் பின்னர் கேரளா அணி புள்ளிகளை குவித்து முன்னேறியது.

இருப்பினும் சென்னை வீரர்கள் சளைக்காமல் ஈடுகொடுத்து விளையாடினர். போட்டியின் முடிவில், 15-8, 15-8, 13-15, 15-11 என்ற செட் கணக்கில் காலிகட் ஹீரோஸ் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர் வெராஃப் 8 புள்ளிகளும், அகின் 6 மற்றும் நவீன் 5 புள்ளிகளும் எடுத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close