புரோ வாலிபால் லீக்: சென்னை அணி வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 09:30 am
prop-volleyball-league

புரோ வாலிபால் லீக் தொடரில் பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணியை 4-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சென்னை ஸ்பார்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது. இந்த போட்டி கொச்சி ராஜிவ்காந்தி உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்றது. எடுத்த எடுப்பிலேயே ஐதராபாத் அணி புள்ளிகளை குவித்து மளமளவென முன்னேறியது.

இப்போட்டியில்  4-1 என்ற கணக்கில் சென்னை வெற்றி பெற்று 2 புள்ளிகளை ஈட்டியது. இத்தொடரில் சென்னை பெறும் முதல் வெற்றி இதுவாகும். சென்னை வீரர்களின் கச்சிதமான ஒருங்கிணைந்த ஆட்டமே இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

கடைசி செட்டிலும் வென்றிருந்தால் புரோ வாலிபால் லீக் வரலாற்றில் எதிரணியை அனைத்து ஐந்து செட்டுகளிலும் வீழ்த்தி முதல் வாஷ் அவுட் வெற்றியை பெற்ற அணி என்ற பெருமையை சென்னை பெற்றிருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு நழுவியது. சென்னை ஸ்பார்டன்ஸ் அணி அடுத்து   11ம் தேதி கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close