சென்னையில் தென்மண்டல எறிபந்து போட்டி இன்று தொடக்கம் !

  டேவிட்   | Last Modified : 09 Feb, 2019 09:27 am
south-zone-throwball-championship-at-chennai

சென்னை நங்கநல்லூரில் 13வது தென் மண்டல தேசிய எறிபந்து போட்டி இன்று தொடங்குகிறது. இதில் பங்கு பெறவுள்ள தமிழக அணிகளின் பெயர் பட்டியலை தமிழ்நாடு மாநில எறிபந்து சங்கம் வெளியிட்டுள்ளது. 

சென்னை சென்னை நங்கநல்லூரில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில், 13வது தென் மண்டல தேசிய எறிபந்து போட்டி இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவுள்ள 32 பேர் கொண்ட தமிழக ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.  சேலத்தைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்ஷினி ஆகியோர் அணிகளின் கேப்டன்களாக உள்ளனர். 

பயிற்சியாளர்களாக மும்மூர்த்தி, ப்ரீத்தி ஆகியோரும், அணி மேலாளர்களாக ஸ்ரீதரன், கீர்த்திகா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close