மீண்டும் கேப்டன் வேலை பார்த்த தோனி: உற்சாகமடைந்த ரசிகர்கள்!

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 01:09 pm
when-ms-dhoni-took-up-captaincy-responsibility-from-rohit-sharma

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பணியை தோனி சில ஓவர்கள் மேற்கொண்டார். 

கடந்தாண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய அணியின் கேப்டனாக தோனி தலைமைதாங்கினார். அதுவே அவர் கேப்டனாக விளையாடிய 200வது போட்டியாகும். 

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகும் தொடர்ந்து தனது ஆலோசனைகளை தற்போதைய கேப்டன் விராட் கோலி அளித்து வருகிறார். ஆனாலும் தோனியை மீண்டும் கேப்டனாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவர் ரசிகர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்காகவே நேற்றைய போட்டியில் தோனி மீண்டும் கேப்டன் பணியை செய்தார். 

நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா 16வது ஓவரில் கையில் அடிப்பட்டு டிரெசிங் ரூமிற்கு சென்றுவிட்டார். அதனால் தோனி இந்திய அணியை வழிநடத்தினார். இந்திய அணியின் கேப்டனான கோலி ஓய்வில் இருப்பதால் துணை கேப்டன் ரோஹித் தற்போது கேப்டனாக இருக்கிறார். 

அவரே காயத்தால் வெளியேறியதால் தோனி வழிநடத்தினார். அப்போது அவர் ஃபீல்டிங் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close