நெல்லை: பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டி !

  டேவிட்   | Last Modified : 12 Feb, 2019 07:00 pm
nellai-inter-school-athletic-meet

நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கிடையிலான தடகள போட்டி வீரர் வீராங்கனைகளுக்கு அறிவியல் மற்றும் மனநலம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்படும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயசித்ரா தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருநெல்வேலி பிரிவு தென்காசி, சேரன்மகாதேவி, திருநெல்வேலி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட அளவிலான உலக திறனாய்வு திட்ட தடகளப் போட்டிகள் நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.   

தென்காசி கல்வி மாவட்ட மாணவ மாணவிகளின் தடகள போட்டிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த இளம் வீரர் வீராங்கனைகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயசித்ரா, விளையாட்டு, அறிவியல் மற்றும் மனநலம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.  இதனால், மாணவ மாணவிகளின் உடல்நலம் மற்றும் அக்கறை மேம்படும் என்று கூறிய அவர், இளம் விளையாட்டு வீரர்களின் முக்கிய பங்கு விளையாட்டு ஆசிரியர்களிடம் தான் உள்ளது எனவும்  அவர் பேசினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close