புரோ வாலிபால் லீக்: நாளை முதல் சென்னையில் தொடர்கிறது...!

  டேவிட்   | Last Modified : 15 Feb, 2019 09:49 am
pro-volleyball-league-from-tomorrow-in-chennai

இந்திய கைப்பந்து சம்மேளம், பேஸ்லைன் வென்ச்சர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் புரோ கைப்பந்து லீக் ஆகியவை இணைந்து நடத்தும் புரோவாலிபால் லீக் சென்னையில் நாளை முதல் தொடங்குகிறது. 

இந்தப் போட்டியில் கொச்சி ப்ளு ஸ்பைக்கர்ஸ், பிளாக் ஹாக்ஸ் ஹைதராபாத், அகமதாபாத் டிஃபென்டர்ஸ், சென்னை ஸ்பார்டன்ஸ், காலிகட் ஹீரோஸ், யு மும்பா வாலி ஆகிய 6 அணிகள் பங்கேற்று வருகின்றன. 

புரோ வாலிபால் லீக் கடந்த 2ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை கொச்சியில் நடைபெற்றது. 14 மற்றும் 15ஆம் தேதி அணிகள் கொச்சியில் இருந்து சென்னை வரவும், ஓய்வுக்காவும் போட்டிகள் நடைபெறவில்லை. 

இதனைத் தொடர்ந்து, நாளை (16ஆம் தேதி) சென்னையில் துவக்க விழாவுடன் தொடங்குகிறது. அதன் விவரங்கள்:
16-02-2019 - சென்னை ஸ்பார்ட்டன்ஸ் - யு மும்பா
17-02-2019 - சென்னை ஸ்பார்ட்டன்ஸ் - அகமதாபாத் டிஃபென்டர்ஸ்
18-02-2019 - யு மும்பா - அகமதாபாத் டிஃபென்டர்ஸ்
19-02-2019 - அரையிறுதிப் போட்டி (1)  - இரவு 7 மணி
20-02-2019 - அரையிறுதிப் போட்டி (2)  - இரவு 7 மணி
22-02-2019 - இறுதிப்போட்டி - இரவு 7 மணி

இதுவரை கொச்சியில் நடைபெற்ற போட்டியில், 11 புள்ளிகளுடன் காலிகட் ஹீரோஸ் முதலிடத்திலும், 8 புள்ளிகளுடன் கொச்சி ப்ளு ஸ்பைக்கர்ஸ் இரண்டாவது இடத்திலும், 4 புள்ளிகளுடன் பிளாக் ஹாக்ஸ் ஹைதராபாத் மூன்றாவது இடத்திலும், சென்னை ஸ்பார்ட்டன்ஸ் 2 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close