தென்னிந்திய பளு தூக்கும் போட்டி: தங்கத்தை கைப்பற்றிய சேலம் வீரர்!

  Newstm Desk   | Last Modified : 17 Feb, 2019 05:03 pm
salem-player-win-in-south-india-weightlifting-championship

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான பளு தூக்கும் போட்டியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜி.பி.அனீஷ்குமார் என்பவர் 230 கிலோ எடை தூக்கி தங்கபதக்கத்தை கைப்பற்றினார். 

தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்கம் மற்றும் மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் இணைந்து நடத்தும் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள் கோவை நேரு கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன், கோவை மாவட்ட பளு தூக்கும் சங்க தலைவர் ஜி.கே.செல்வகுமார் மற்றும் நேரு கல்லூரி செயலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தனர். 

மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து 200 வீரர்கள் மற்றும் 180 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழகம் சார்பாக 102 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட சேலம் மாவட்ட வீரரும், தபால்துறையை சேர்ந்தவருமான G.P.அனீஷ்குமார் ஒட்டுமொத்தமாக 230 கிலோ எடையை தூக்கி தங்க பதக்கத்தை கைப்பற்றினார். இவருக்கு சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்கத்தினர் வாழ்த்துக்களும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close