புரோ வாலிபால்: இறுதிப் போட்டியில் காலிகட்டை வீழ்த்த சென்னை ஸ்பார்டன்ஸ் தயார்...!

  டேவிட்   | Last Modified : 21 Feb, 2019 09:36 pm
pro-volleyball-league-calicut-vs-chennai

புரோ வாலிபால் லீக் இறுதிப்போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி காலிகட் ஹீரோஸ் அணியை நாளை எதிரகொள்கிறது. இப்போட்டியில் வெல்வது மூலம் புரோ வாலிபால் லீக்கின் முதல் பட்டம் வென்ற வரலாற்று சிறப்பை சென்னை பெறும்.

இத்தொடரில் காலிகட் வலிமையான அணியாக திகழ்கிறது. லீக்கில் அனைத்து போட்டிகளிலும் வென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்ற இந்த அணி லீக் சுற்றில் சென்னை அணியை 4-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தது. ஆனால் சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர்கள் தங்கள் சில ஆச்சரியமூட்டும்  வித்தைகள் மூலம் எதிரணிக்கு ஆபத்தானவர்களாக விளங்கினர். 

கொச்சிக்கு எதிரான அரையிறுதியில் 1-2 என்ற செட் கணக்கில் பின் தங்கியிருந்த சென்னை பின்னர் அதிரடியான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 

கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக காலிகட்  திகழ்ந்தாலும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு ஊக்கம் தரும் என கூறுகிறார் சென்னை ஸ்பார்டனின் நட்சத்திர வீரர்  சொரோக்கின்ஸ். கொச்சிக்கு  எதிராக அரையிறுதியில் ஆடிய அதே ஆட்டத்தை இறுதி போட்டியில் வெளிப்படுத்தினாலே கோப்பையை வெல்ல முடியும் என்கிறார் சொரோக்கின்ஸ். லாட்விய வீரரான சொரோக்கின்ஸ் அரையிறுதியில் 17 புள்ளிகளை குவித்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close