துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை: இந்தியாவின் அபூர்வி சந்தேலா தங்கம்!

  Newstm Desk   | Last Modified : 23 Feb, 2019 03:41 pm
issf-world-cup-apurvi-chandela-wins-gold-in-10m-air-rifle

சர்வதேச துப்பக்கிச் சுடுதல் விளையாட்டு ஆணையம் (ISSF) நடத்தும் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பையில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா, தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 

தலைநகர் புதுடெல்லியில், துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை துவங்கியுள்ளது. இதில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா, 629.3 புள்ளிகள் பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற இரண்டு இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மோக்தில் மற்றும் 19 வயதேயான தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை. 

இறுதிச் சுற்றில், சந்தேலா 252.9 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்து, தங்க பதக்கம் வென்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close