உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரருக்கு தங்கப்பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 24 Feb, 2019 03:48 pm
saurabh-chaudhary-bags-first-senior-gold-with-world-record

ஐஎஸ்எஎஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சவுரப் சவுத்திரி 245.0 புள்ளிகள் பெற்று 10 மீட்டர் ஏர் மிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

டெல்லியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இன்று 10 மீட்டர் பிஸ்டர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. 

இதில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார். யூத் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இவரின் முதல் உலகக்கோப்பை சீனியர் பிரிவுக்கான தங்கப்பதக்கம் இது.   இவர் ஜூனியர் பிரிவிலும் தங்கம் வென்றிருக்கிறார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் இரண்டாவது தங்கம் இதுவாகும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close