ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மேரி கோம் விலகல்

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 04:06 pm
mary-kom-to-skip-asian-boxing-championships

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை மேரி கோம் விலகுவதாக அறிவித்துள்ளார்.

தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் ஏப்ரல் 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் இருந்து மேரி கோம் விலகி உள்ளார். இவர் இந்தாண்டு நடக்கவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கவனம் செலுத்த இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. 

இந்த தொடரில் 20 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி பங்கேற்கிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் 46 பேர் கலந்து கொண்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close