டோக்கியோ ஒலிம்பிக்கில் மேரிகோம் பங்கேற்கவில்லை...?

  டேவிட்   | Last Modified : 19 Mar, 2019 08:42 am
skipping-asian-championship-part-of-olympics-qualification-plan-mary-kom

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டியான, ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கவில்லை என இந்திய வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் கைப்பற்றும் புள்ளிகளைக் கணக்கில் கொண்டு, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். ஆனால் ஆசிய போட்டியில் தான் பங்கேற்கவில்லை என மேரிகோம் தெரிவித்துள்ளார். 

மேலும், ரஷியாவின் ஏகடெரின்பர்க்கில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டி மூலம் ஒலிம்பிக் தகுதி பெற விரும்புவதாகவும், ஆசிய போட்டியில் கலந்து கொள்ளாததற்கு இது ஒரு திட்டம் எனவும் தெரிவித்துள்ளார். 

தனது 51 கிலோ பிரிவில் எதிராளிகள் நிலை குறித்து அறிய வேண்டியுள்ளதால், உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும், முறையாக திட்டமிடாமல் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியாது. ஆகவே தான் முக்கிய போட்டிகளை தேர்வு செய்து கலந்து கொள்கிறேன் எனவும் மேரிகோம் தெரிவித்துள்ளார். 

மேலும், தான் ஓய்வு பெற்றாலும், குத்துச்சண்டை விளையாட்டிலேயே தன் வாழ்நாள் இருக்கும் எனவும், இந்திய அரசுக்கோ அல்லது குத்துச்சண்டை சம்மேளனத்துக்கோ எனது சேவை தேவைப்பட்டால்,  அதற்கு எப்போதும் தயாராக உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close