ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 16 தங்கம் வென்று அசத்தல் !

  டேவிட்   | Last Modified : 01 Apr, 2019 07:55 pm
india-finish-with-16-golds-in-asian-airgun-championship-in-taipei

தாய்பேயில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கடைசி நாளான இன்று (திங்கட்கிழமை) மட்டும் 6 தங்கப்பதக்கங்களை வென்றதுடன் மொத்தம் 16 தங்கப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. 

தாய்பே நாட்டின் டவோயுவான் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) போட்டி நடைபெற்றது. இன்று நடைபெற்ற கடைசி போட்டியில், யாஷ் வர்தான், ஷ்ரேயா அகர்வால் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர். இன்று மட்டும் 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர். 

இந்திய வீரர், வீராங்கனைகள் 16 தங்கப் பதக்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். இந்தியா, அடுத்து வரும் 5ஆம் தேதி அரபு நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close