ஆசிய பேட்மிண்டன் போட்டி:  பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் !

  டேவிட்   | Last Modified : 25 Apr, 2019 07:38 am
asia-badminton-championships-pv-sindhu-saina-nehwal-advance

சீனாவில் நடைபெற்று வரும் 39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.  

சீனாவில் 39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 28 நிமிடங்களில் 21-14, 21-7 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை சயாகா தகாஹஷியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் 12-21, 21-11, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் சீனா வீராங்கனை ஹான் யுவை வீழ்த்தியுள்ளார். 
 
இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-13, 17-21, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பான் வீரர் சகாய் கஜூமசாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close