மாநில அளவிலான கபடி போட்டி: 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

  அனிதா   | Last Modified : 28 Apr, 2019 11:51 am
state-level-kabaddi-tournament-more-than-60-teams-participating

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் ஆடவர், மகளிர் என 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

திருச்சி மாவட்டம், லால்குடியை  அடுத்த கோவண்டகுறிச்சி ஊராட்சியில் 50ஆம் ஆண்டு மாநிலஅளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் கோயம்புத்தூர், திருச்சி, நாமக்கல், திருவாரூர், தர்மபுரி, அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத்திலிருந்து ஆடவர் பிரிவில் 40 அணிகளும், மகளிர் பிரிவில் 27 அணிகளும் பங்கேற்றன.


 
இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல்பரிசு ரூ. 25 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரமும், நான்காம் பரிசு ரூ. 7 ஆயிரமும் மற்றும் சிறப்பாக விளையாடிய 50 வீரர்களுக்கு  வெள்ளிக்காசுகளும் வழங்கப்பட்டது. 


 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விழாகுழுவின் தலைவர், தற்போது உள்ள சூழலில் கபடி விளையாட்டு நலிந்து வருகிறது. அதை ஊக்குவிப்பதற்காக தொடர்ந்து இந்த போட்டியினை   நடத்தி வருகிறோம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது போல கபடி விளையாட்டையும் அழிந்து விடாமல் மீட்டெடுக்க வேண்டும் என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close