மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி: திரளான வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!

  அனிதா   | Last Modified : 05 May, 2019 06:54 pm
state-level-powerlifting-competition-in-salem

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிளான வலு தூக்கும் போட்டியில் திரளான வீரர், வீராங்களைகள் பங்கேற்றனர். 

தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம் சார்பில், சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் திடலில் 10வது மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.

ஆண்களுக்கு 53 கிலோ 105 கிலோ 120 கிலோ என்ற எடை பிரிவிலும், பெண்களுக்கு 43கிலோ, 63 கிலோ, 72 கிலோ 84 கிலோ என்ற எடை பிரிவிலும் போட்டிகள் நடைபெற்றது.

இந்த மாநில அளவிலான  வலுதூக்கும் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து திரளான வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close