கோ-கோ போட்டி: சென்னை அணி முதலிடம்!

  அனிதா   | Last Modified : 07 May, 2019 10:50 am
state-level-co-co-competition-chennai-team-win

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோ- கோ விளையாட்டுப் போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

தமிழ்நாடு கோ-கோ விளையாட்டுக் கழகம் சார்பில் 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள், துவாக்குடி அருகில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 4 -ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றன.  நாக் -அவுட் முறையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் சென்னை, நெல்லை, கோவை, ராமநாதபுரம், திருச்சி, ஓசூர், தூத்துக்குடி, நாகை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி சுற்றில் சென்னை அணியும், சிவகங்கை அணியும் மோதின. இறுதியில், சென்னை அணி  12-9 என்ற புள்ளி கணக்கில்  வெற்றிபெற்றது. இரண்டாவது இடத்தை சிவகங்கை அணியும், 3வது இடத்தை திருச்சி அணியும், 4வது இடத்தை ஈரோடு அணியும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இப்போட்டிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close