தேசிய போட்டிகள் : தங்கம் வென்ற தமிழக வைரங்களுக்கு உற்சாக வரவேற்பு!

  அனிதா   | Last Modified : 08 May, 2019 04:15 pm
students-win-gold-medal-at-the-national-level-competition

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தேக்வாண்டோ, ஸ்கேட்டிங் மற்றும் தடகள போட்டிகளில் தங்கம் வென்று தாயகம் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

குஜராத்  மாநிலம் வாபியில் கடந்த 4, 5 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான தேக்வாண்டோ, ஸ்கேட்டிங் மற்றும் தடகள போட்டிகள் நடைப்பெற்றன. இந்த போட்டிகளில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்பட 18மாநிலங்களைச் சேர்ந்த 1,800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தமிழக அணி சார்பில் சேலம் மகரிஷி மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோட்டை எஸ்.வி..பி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்நத மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். 14, 17, 19 வயது என மூன்று பிரிவுகளின்கீழ் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தேக்வாண்டோ போட்டியில் 29 பேரும், ஸ்கேட்டிங் போட்டியில் 5 பேரும், அத்லடிக் போட்டியில் ஒருவர் என மொத்தம் 35 பேர் தங்கப் பதக்கத்தை வென்றனர். 

 

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் இன்று ரயில் மூலம் சேலம் வந்தடைந்தனர். அவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  மேலும், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close