இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால், கரோலினா சாம்பியன் பட்டம் !

  டேவிட்   | Last Modified : 20 May, 2019 09:21 am
italy-open-tennis-nadal-and-carolina-champion

ரோமில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். 

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் நேற்று (19ஆம் தேதி) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் ஸ்பெயினின் ரபெல் நடாலும் மோதினர். இதில் நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். . பரிசுத்தொகையாக வெற்றி பெற்ற நடாலுக்கு ரூ.7½ கோடியும், 2-வது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.3¾ கோடியும் அளிக்கப்பட்டது. 

இதே போல், பெண்கள் பிரிவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா  6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close