மாநில ஃபிஸ்ட்பால் போட்டி: நாமக்கல், காஞ்சிபுரம் அணிகள் சாம்பியன் !

  டேவிட்   | Last Modified : 20 May, 2019 01:36 pm
national-firstball-namakkal-kanchipuram-champion

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஃபிஸ்ட்பால் போட்டியில் ஆடவர் பிரிவில் நாமக்கல் அணியும், மகளிர் பிரிவில் காஞ்சிபுரம் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன. 

சென்னை, பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மாநில அளவிலான ஃபிஸ்ட்பால் போட்டி நடைபெற்றது. நேற்று (19ஆம் தேதி) நடைபெற்ற ஆடவர் இறுதிப் போடடியில் நாமக்கல் அணியும், சென்னை அணியும் மோதின. இதில் நாமக்கல் அணி 15-14, 07-11, 14-12 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மூன்றாவது இடத்தை கிருஷ்ணகிரி அணியும், நான்காவது இடத்தை காஞ்சிபுரம் அணியும் பிடித்தன. 

இதேபோல் மகளிர் பிரிவின் இறுதிப்போட்டியில் காஞ்சிபுரம் அணி 11-08, 11-09 என்ற புள்ளிக்கணக்கில் நாமக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை அணி மூன்றாவது இடத்தையும், திருவள்ளுர் அணி நான்காவது இடத்தையும் பிடித்தன.  வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும், பரிசுகளும் வழங்கப்பட்டன.  மேலும், காஞ்சிபுரத்தை சேர்ந்த பியூலா, நாமக்கல்லைச் சேர்ந்த சதீர் ஆகியோருக்கு சிறந்த விளையாட்டு வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவவிக்கப்பட்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close