குத்துச்சண்டை: அரையிறுதியில் மேரிகோம் !

  டேவிட்   | Last Modified : 21 May, 2019 08:39 am
indian-open-boxing-mary-kom-in-semi-finals

அஸ்ஸாமில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மேரிகோம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். 

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி நேற்று (20ஆம் தேதி) தொடங்கியது. இதில் 6 நாடுகளைச் சேர்ந்த 200 பேர் பங்கேற்று வருகின்றனர். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் பிரிஜேஷ் யாதவ், சஞ்சய், நமன் தன்வார், சன்ஜீத், சதீஷ்குமார், அதுல் தாகூர் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். 

இதேபோல், பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் லவ்லினா போர்கோஹைன், அஞ்சலி ஆகியோர் 69 கிலோ எடைப்பிரிவிலும், பாக்யபாதி கசாரி, சவீட்டி போரா ஆகியோர் 75 கிலோ எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவின் முன்னணி வீராங்கனை மேரிகோம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் மேரிகோம் தெலுங்கானா வீராங்கனை நிஹாத் ஜரீனுடன் மோதுகிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close