தென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி!

  அனிதா   | Last Modified : 28 May, 2019 03:28 pm
south-indian-women-s-volleyball-match

கோவையில் நடைபெற்று வரும் தென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டியில் கேரளா, ஆந்திரா, கர்நாடாக உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் கோவை ஊரக கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சி அமைப்பு சார்பில், தென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இப்போட்டிகள் வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சூழல் கோப்பைகளும், பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close