சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் வெண்கலம் வென்றார் சென்னை மாணவி!

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 09:33 am
chennai-student-won-the-bronze-in-international-boxing-match

சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் சென்னை மாணவி கலைவாணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இரண்டாவது ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டி கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 16 நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 

மொத்தம் 16 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இதில், சென்னையை சேர்ந்த கலைவாணி காலிறுதியில் பூட்டான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜோசி அரைபேகாவை எதிர்கொண்ட கலைவாணி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close