சர்வதேச வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற 8 வயது சிறுவன்!

  அனிதா   | Last Modified : 04 Jul, 2019 12:24 pm
8-year-old-boy-won-gold-at-the-international-archery-competition

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் தங்கம் வென்றுள்ளார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள கூத்தூர் ஊராட்சியில் வசித்து வரும் முத்துக்குமார், கிஷாராணி தம்பதியரின்  ஜீவன்சிவா(8). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மகாபாரதம், கர்ணன் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களை பார்த்து வில்வித்தை கற்றுக்கொள்ளும் ஆர்வம் வந்ததால், பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்த்து வில்வித்தை பயிற்சி அளித்துள்ளனர் அவரது பெற்றோர். 

தற்போது 8 வயதே ஆன சிறுவன் இதுவரை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று 30க்கும் மேற்பட்ட பதக்கங்கள், பரிசுகள், சான்றிதழ்களை பெற்றுள்ளார். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 மணி நேரம் தொடர் வில் அம்பு எய்து தமிழ்நாடு இளம் சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பெற்றார். 

இந்நிலையில், அர்ஜீனா ஆசார்யா பெடரேசன் ஆப் தமிழ்நாடு சார்பில் கடந்த ஜீன் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையேயான 20 மீட்டர் சர்வதேச போட்டியில் 10 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற மாணவர் ஜீவன் சிவா முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றார்.

இந்த வெற்றி மகிழ்ச்சியளிப்பதாகவும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்காக தங்கம் வெல்வதே என்னுடைய இலட்சியம் என்றும் சிறுவன் ஜீவன் சிவா தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close