திருச்சி: மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி!

  அனிதா   | Last Modified : 11 Aug, 2019 04:31 pm
trichy-district-wide-taekwondo-competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் 610 பள்ளி, மாணவர்கள் பங்கேற்றனர். 

திருச்சி தனியார் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்று தொடங்கி 2 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 610 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

சப்ஜீனியர், கேடட், ஜுனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கு எடை அடிப்படையில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்து வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகள் அடுத்த மாதம் தேனி, புதுக்கோட்டையில் நடைபெறும் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close