உலக சாதனையை முறியடித்த முதல் இந்தியர்!

  Newstm Desk   | Last Modified : 15 Sep, 2019 01:21 pm
first-indian-to-breaks-world-record

உலகின் மிக கடுமையான சவாலாக கருதப்படும் எண்டியுரோமன் ட்ரையதலான் போட்டியில் முதல் முறையாக, இந்தியாவை சேர்ந்த மயாங்க் வைத் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 

எண்டியுரோமன் ட்ரையதலான் என்ற போட்டியில், இங்கிலாந்தில் போட்டியை தொடங்கும் போட்டியாளர் ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் என மூன்று  வகைகளில் பயணம் செய்து பிரான்ஸ் நாட்டை சென்றடைய வேண்டும். 

இத்தகைய சவாலான போட்டியில், முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த மயாங்க் வைத் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம்  இந்தியாவிலும், ஆசியாவிலும் முதல் வெற்றி கண்ட முதல் வீரர் என்ற சாதனையையும்,  உலகளவில் இந்த போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த 44 பேரில் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேலும், 52 மணி நேரம் 30 நிமிடங்களில் இப்பயணத்தை முடித்த பெல்ஜியத்தைச் சேர்ந்த ஜூலியன் டெனயரின் சாதனையை முறியடித்து 50 மணி நேரம் 24 நிமிடங்களில் இப்பயணத்தை முடித்து சாதனை புரிந்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மயாங்க் வைத், "இது உலகிலேயே மிகவும் கடுமையான போட்டி.  ஓடுதல், நீச்சல், மற்றும் சைக்ளிங் ஆகிய மூன்றில் நீந்துதல் மற்றும் சைக்ளிங் பகுதிகளே மிகவும் கடுமையானதாக இருந்தது. துங்காமல் 50 மணி நேர நீண்ட பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. எனினும், அவை அனைத்தையும் கடந்து வெற்றியை எட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என தெரிவித்துள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close