உலக குத்துச்சண்டை போட்டி: வெண்கலம் வென்றார் மேரிகோம்!

  அனிதா   | Last Modified : 12 Oct, 2019 11:17 am
women-s-world-boxing-championships

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 

ரஷ்யாவில் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் பங்கேற்றார். தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஜூதமாஸ் ஜிட்போங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய மேரிகோம், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த இங்க்ரிட் வளென்சியாவை 5 -0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், அரையிறுதி சுற்றில் துருக்கி வீராங்கனை புசேனாஸியுடன் மோதிய மேரி கோம் போராடி (4-1) தோல்வியுற்றார். இதையடுத்து அவருக்கு வெண்கலம் பதக்கம் கிடைத்துள்ளது. உலக குத்துச்சண்டை போட்டியில் இதுவரை 6 தங்கம், ஒரு வெள்ளி ஒரு வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று மேரிகோ சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close