சர்வதேச தடகளப்போட்டியில் தங்கப்பதக்கங்களை குவித்த வீரருக்கு ராஜ மரியாதை!

  அனிதா   | Last Modified : 04 Nov, 2019 03:40 pm
gold-medal-at-the-international-athletic-championship

சீனாவில் நடைபெற்ற 7வது சர்வதேச இராணுவ வீரர்களுக்கான தடகளப்போட்டியில் தங்கப்பதக்கங்களை குவித்த வீரருக்கு கும்பகோணத்தில் நகர மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

சீனாவில் 7வது சர்வதேச இராணுவ வீரர்களுக்கான தடகளப்போட்டி கடந்த அக்.17ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட கும்பகோணத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஆனந்த் குணசேகர், 100மீ, 200மீ, 400 மீ என 3 போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். பதக்கங்களோடு ஊர் திரும்பிய  ஆனந்த் குணசேகருக்கு நகர மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜ மரியாதையுடன், மேள, தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்து பாராட்டு தெரிவித்தனர். இவர் ராணுவத்தில் இருந்த போது, ஒரு காலை இழந்தது குறிப்பிடத்தக்கது. 

பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே தனது அடுத்த லட்சியம் என ஆனந்த் குணசேகரன் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close