• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

மிகப் பிரம்மாண்ட கால்பந்து திருவிழா பிரீமியர் லீக் நாளை தொடங்குகிறது!

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2018 05:53 pm

english-premier-league-starts-tomorrow

கால்பந்து உலகின் மிகப்பெரிய திருவிழா, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள். அது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடியது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் வரும், 10 மாத திருவிழா என்றால் அது இங்லீஷ் பிரீமியர் லீக்தான். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எப்படி ஐ.பி.எல் போட்டியோ, அதுபோல் கால்பந்து உலகில் மிகவும் முக்கியமானது, பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கும் விளையாட்டு இ.பி.எல். இந்த ஆண்டுக்கான போட்டிகள் நாளை தொடங்குகிறது. 

முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் அணியும் லெஸ்டர் சிட்டி சிட்டியும் மோதுகிறது. நாளைத் தொடங்கும் போட்டி அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீடிக்கும். இதில், அதிக புள்ளிகள் பெறும் அணியே சாம்பியனாக அறிவிக்கப்படும். உலகக் கோப்பையைக் காட்டிலும் இந்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. கிட்டத்தட்ட 10 மாதங்கள் வார இறுதிநாட்களில் மட்டும் நடக்கும் இந்த திருவிழாவைக் காண இங்கிலாந்து மட்டுமின்றி உலகம் முழுக்க உள்ள கால்பந்து ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதற்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன் சாம்பியன் பட்டம் வென்று உலகையே அதிர்த்தியில் ஆழ்த்திய லெஸ்டர் சிட்டி அணி மோத இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close