27ஆவது ஆண்டாக இங்கிலிஷ் பிரிமியர் லீக்!

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2018 06:17 pm
discover-the-origins-and-history-of-the-top-tier-of-english-football

கால்பந்து உலகின் மிகப்பெரிய திருவிழா இங்கிலீஷ் பிரீமியர் லீக். 27வது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தப்படும் உலகின் மிகவும் காஸ்ட்லி விளையாட்டு இது. உலகக் கோப்பை கால்பந்தைவிட இங்கு அதிகம் பணம் புழங்குகிறது என்றால் எவ்வளவு பெரிய ஆட்டம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

முதன் முதலில் 1992ம் ஆண்டு இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டம் தொடங்கியது. அந்த ஆண்டு இங்கிலாந்து கால்பந்து லீக்கில் இருந்து பிரிந்து 20 அணிகள் உருவாக்கப்பட்டன. அர்சனல், மான்செஸ்டர் யுனைட்டட், மான்செஸ்டர் சிட்டி, எவர்டன், விமபிள்டன் என 20 அணிகளுக்கு இடையே கால்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படும்.

1992ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி போட்டி தொடங்கியது. அது முதல், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் போட்டிகள் தொடங்குகிறது.  இதில், கால் இறுதி, அரை இறுதிப் போட்டிகள் என்று எதுவும் கிடையாது. முதல் ஆண்டு மட்டும் 22 அணிகள் மோதிய நிலையில், அதன்பிறகு அது 20 அணிகளாக குறைக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும், மற்ற 19 அணிகளுடனும் இரண்டு முறை மோதும். வெற்றிபெறும் அணிகளுக்கு 3 புள்ளிகள் வழங்கப்படும். டிராவில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். வழக்கம்போல, தோல்வியைத் தழுவும் அணிக்கு புள்ளிகள் கிடையாது.

எந்த ஒரு அணியும் யாரை வேண்டுமானாலும் தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ளலாம். எந்த விதி முறையோ, வயது வரம்போ கிடையாது. இந்த போட்டியில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் யுனைட்டட் அணிதான். 14 முறை வென்றுள்ள அந்த அணி தன்னுடைய முதல் போட்டியில் லெஸ்டர் சிட்டியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close