• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

நியூகாஸிலை போராடி வென்றது டாட்டன்ஹேம்!

  shriram   | Last Modified : 12 Aug, 2018 05:48 am

tottenham-beat-newcastle-2-1

பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில், டாட்டான்ஹேம் ஹாட்ஸ்பர்ஸ், நியூ காஸிலை, கடைசி வரை போராடி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கடந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத அளவு சிறப்பாக விளையாடி, செல்சி, லிவர்பூல் போன்ற பலம்வாய்ந்த அணிகளை முந்தி, 3வது இடத்தை பிடித்தது டாட்டான்ஹேம். இந்தமுறை கோப்பையை வெல்ல அந்த அணி முயற்சிக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில், முதல் போட்டியில் நியூகாஸிலுடன் மோதியது. ரஃபா பெனிடெஸ் தலைமையில், 2வது தர லீக்கில் இருந்து பிரீமியர் லீக் முன்னேறி அட்டகாசமாக விளையாடி வருகிறது நியூகாஸில். 

அதனால் போட்டி துவங்கியது முதலே, இரு அணிகளும் முழு வீச்சில் அட்டாக் செய்து விளையாடின. இரு முனைகளிலும் நல்ல கோல் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், முதல் கோல் அடித்ததோ டாட்டன்ஹேம். 8வது நிமிடத்தில் கிடைத்த ஒரு கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் டிபென்ஸ் வீரர் வெர்ட்டோன்கன் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே, நியூகாஸில் அணியின் ஜோசெலு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். 11வது நிமிடத்தில் ரிச்சி கொடுத்த சூப்பர் பாஸை, தலையால் முட்டி கோலக்கினார் ஜோசெலு.

18வது நிமிடத்தில், மீண்டும் கிடைத்த ஒரு சூப்பர் கிராஸ் வாய்ப்பை பயன்படுத்தி டாட்டன்ஹேம் அணியின் நட்சத்திர வீரர் டெலி ஆலி கோல் அடித்தார். தொடர்ந்து நியூகாஸில் அணி ஆதிக்கம் செலுத்தி, பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், போட்டியை சமன் செய்ய முடியவில்லை. 2-1 என டாட்டன்ஹேம் வெற்றி பெற்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close