வெஸ்ட் ஹேமை துவம்சம் செய்தது லிவர்பூல்!

  shriram   | Last Modified : 13 Aug, 2018 04:53 am
liverpool-crushes-west-ham-4-0

வெஸ்ட் ஹேம்  அணிக்கு எதிரான இங்கிலாந்து பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில் விளையாடிய லிவர்பூல், 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

கடந்த சீசனில், ஜெர்மன் பயிற்சியாளர் யர்கன் க்லாப் தலைமையில், பிரீமியர் லீக்கில் 4 இடத்தை பிடித்தாலும், அட்டகாசமாக விளையாடி  ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதி போட்டி வரை சென்றது லிவர்பூல். ஆனால், இந்தமுறை நிச்சயம் பிரீமியர் லீக் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு முதல் போட்டியில் வெஸ்ட் ஹேமுடன் லிவர்பூல் மோதியது. மான்செஸ்டர் சிட்டியின் முன்னாள் வெற்றி பயிற்சியாளர் மானுவேல் பெல்லக்ரினி வெஸ்ட் ஹேம் அணியின் புதிய பயிற்சியாளராக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சிறப்பாக போட்டியை துவக்கியது லிவர்பூல். சாடியோ மானே, முஹம்மது சாலா, ஃபிர்மீனோ ஆகிய 3 அட்டாக் வீரர்களும் தங்களது வேகத்தால் வெஸ்ட் ஹேமுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். கடந்த ஆண்டு பிரீமியர் லீக்கில் 32 கோல்கள் அடித்து சாதனை படைத்த சாலா, 19வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இடதுபுறம் இருந்து ராபர்ட்சன் கொடுத்த பாஸ் கோல் கீப்பரை தாண்டி வர, இரண்டடி தூரத்தில் இருந்து எளிதாக கோல் அடித்தார் சாலா. முதல் பாதி முடியும் நேரத்தில், மில்னர் கொடுத்த பாசை, மானே கோலுக்குள் தள்ளி 2-0 என முன்னிலை கொடுத்தார்.

இரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தை லிவர்பூல் தொடர்ந்தது. 53வது நிமிடத்தில் ஃபிர்மீனோ கொடுத்த பாஸை கோல் அடித்தார் மானே. ரெப்ரீ கோலை வழங்கிய பின்னர், ரீபிளேவில் அது ஆப்ஸைடு என தெரிய வந்தது. போட்டி முடியும் நேரத்தில், லிவர்பூலுக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி, ஸ்டர்ரிட்ஜ் கோல் அடித்தார். 4-0 என அபார வெற்றி பெற்றது லிவர்பூல். அட்டகாசமாக விளையாடிய மில்னர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close