• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

மான்செஸ்டர் யுனைட்டடுக்கு பாடம் கற்றுக்கொடுத்தது பிரைட்டன்!

  shriram   | Last Modified : 20 Aug, 2018 06:59 am

brighton-beat-manchester-united-3-2

பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், பலம்வாய்ந்த மான்செஸ்டர் யுனைட்டட் அணியை பிரைட்டன் 3-2 என  வீழ்த்தி ஷாக் கொடுத்தது. 

மான்செஸ்டர் சிட்டி, செல்சி, டாட்டன்ஹேம், லிவர்பூல் போன்ற டாப் அணிகளோடு கோப்பையை வெல்ல கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது யுனைட்டட். முதல் போட்டியில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தி வெற்றி துவக்கத்தை பெற்ற யுனைட்டட், சிறிய அணியான பிரைட்டனுடன் இரண்டாவது போட்டியில் விளையாடியது. 

ஆரம்பம் முதல் யுனைட்டடுக்கு கடும் நெருக்கடி கொடுத்து விளையாடியது பிரைட்டன். யுனைட்டட் அணியின் அட்டாக் எதுவும் கோல் வாய்ப்புகளை உருவாக்கவில்லை. இந்நிலையில், 25வது நிமிடம், பிரைட்டன் அணியின் க்ளென் முர்ரே கோல் அடித்து ஷாக் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்கலேயே பிரைட்டனின் டஃபி கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைட்டட் தடுமாற, ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். 

ஆனால், 34வது நிமிடத்தில், யுனைட்டட் அணியின் லுக்காகு கோல் அடித்தார். முதல் பாதி 2-1 என முடியும் என எதிர்பார்த்திருந்த நிலையில், கடைசி நிமிடத்தில், யுனைட்டட் வீரர் செய்த பவுலால், பிரைட்டனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் பாஸ்கல் கிரோப் கோல் அடிக்க, பிரைட்டன் 3-1 என முன்னிலை பெற்றது. 

இரண்டாவது பாதியிலும் யுனைட்டட் அணி தொடர்ந்து தடுமாறியது. இறுதியில் போட்டி முடியும் நேரத்தில் 94வது நிமிடத்தின் போது, யுனைட்டட் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் போஃபா கோல் அடிக்க 3-2 என போட்டி முடிந்தது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.