• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

லுக்காக்கு டபுள் கோல்; பர்ன்லியை வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைட்டட்

  shriram   | Last Modified : 03 Sep, 2018 05:30 am

manchester-united-beat-burnley-2-0

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் தடுமாற்றமான துவக்கம் பெற்ற மான்செஸ்டர் யுனைட்டட், பர்ன்லியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 

3 போட்டிகளில் ஒரு வெற்றி இரண்டு தோல்வியுடன் சொதப்பலாக விளையாடி, கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த மான்செஸ்டர் யுனைட்டட், பர்ன்லி அணியுடன் மோதியது. யுனைட்டட் வீரர்கள் துவக்கத்தில் இருந்தே பர்ன்லி அணிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். சமீபத்தில் சரியாக விளையாடாத அலெக்சிஸ் சான்செஸ் இந்த போட்டியில் மீண்டும் சிறப்பாக விளையாடி பல வாய்ப்புகளை உருவாக்கினார். 

27வது நிமிடத்தில், இடது பக்கம் இருந்து சான்செஸ் கொடுத்த பாஸை, லுக்காக்கு தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார். 1-0 என யுனைட்டட் முன்னிலை பெற்றது. தொடர்ந்து யுனைட்டட் ஆதிக்கம் செலுத்தி வந்தது. போஃபா, லிங்கார்டு, லுக்காக்கு, சான்செஸ் ஆகியோருடன் சிறப்பாக அட்டாக் செய்தது யுனைட்டட்.44வது நிமிடத்தில், லிங்கார்டு அடித்த ஷாட், பர்ன்லி வீரர் காலில் பட்டு சிதறியது. சரியான இடத்தில் இருந்த லுக்காக்குவை பர்ன்லி வீரர்கள் கவனிக்காமல் விட, அவர் எளிதாக கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். 

இரண்டாவது பாதியில் பர்ன்லி ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து கோல் அடிக்க அந்த அணி முயற்சி செய்ய, மறுமுனையில் யுனைட்டட்டும் பல வாய்ப்புகளை உருவாக்கியது. 69வது நிமிடத்தில் யுனைட்டட்டுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை போஃபா அடிக்க, அதை பர்ன்லி கோல்கீப்பர் ஜோ ஹார்ட் தடுத்தார். சிறிது நேரத்தில், யுனைட்டட் அணியின் ராஷ்பர்டு, எதிரணி வீரருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை தலையால் முட்ட, நடுவர் ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியேற்றினார். 61வது நிமிடம் தான் அவர் மாற்று வீரராக களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இறுதியில் யுனைட்டட் 2-0 என வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் 10வது இடத்திற்கு முன்னேறியது. பர்ன்லி 19வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.