மீண்டு வந்த மான்செஸ்டர் யுனைட்டட் த்ரில் வெற்றி!

  shriram   | Last Modified : 07 Oct, 2018 04:22 pm
manchester-united-beat-newcastle-3-2-in-thrilling-comeback

தொடர் தோல்விகளால் மோசமான நிலையில் இருந்த மான்செஸ்டர் யுனைட்டட் அணி, கடைசி நிமிட கோல் மூலம் நியூகாசிலை 3-2 என தோற்கடித்தது. 

பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் நியூகாஸில், கடந்த 4 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெற முடியாத மான்செஸ்டர் யுனைட்டட் அணியுடன் மோதியது. 

மான்செஸ்டர் யுனைட்டட் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில், மீண்டும் வெற்றி பாதைக்கு யுனைட்டட் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டி துவங்கியது முதல் நியூகாஸில் முழு ஆதிக்கம் செலுத்தியது. 7வது நிமிடத்தில் கென்னெடி கோல் அடித்து, மான்செஸ்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே யோஷினோரி மூட்டோ கோல் அடித்து, 2-0 என நியூகாஸிலுக்கு முன்னிலை கொடுத்தார். முதல் பாதி 2-0 என முடிந்தது. 

இரண்டாவது பாதியிலும் யுனைட்டட் பல வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், கோல் அடிக்க முடியவில்லை. 70வது நிமித்தில் கிடைத்த ப்ரீகிக் வாய்ப்பை பயன்படுத்தி, யுனைட்டட் அணியின் மாட்டா கோல் அடித்தார். 76வது நிமிடத்தில், மார்ஷியல் கோல் அடிக்க, போட்டி சமன் ஆனது. கடைசி நிமிடத்தில், போஃபா கொடுத்த பாஸை தலையால் முட்டி கோல் ஆக்கினார் சான்செஸ். 3-2 என யுனைட்டட் த்ரில் வெற்றி பெற்றது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close