கின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்!

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2018 08:07 pm
chelsea-s-fabregas-makes-guinness-world-record

செல்சி க்ளப் அணிக்காக விளையாடி வரும் செஸ்க் ஃபாப்ரிகாஸ், குறைந்த போட்டிகளில், 100 கோல்கள் அடிக்க தனது அணி வீரர்களுக்கு உதவி செய்து, புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் செஸ்க் ஃபாப்ரிகாஸ், தனது 16வது வயதில் இளம் வீரராக பிரீமியர் லீகின் ஆர்சனல் அணியில் இணைந்தார். அதன்பின், தொடர்ந்து பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி, ஆர்சனல் அணியின் கேப்டன் பதவிக்கு உயர்ந்தார். மிட்பீல்டு வீரரான ஃபாப்ரிகாஸ், 2011ம் ஆண்டு, தனது சிறு வயது க்ளப் அணியான பார்சிலோனாவில் இணைந்தார். மூன்று வருடங்கள் பார்சிலோனாவுக்கு விளையாடிய அவர், 2014ம் ஆண்டு செல்சியில் இணைந்து மீண்டும் பிரீமியர் லீகிற்கு திரும்பினார். 

சேர்ந்த முதல் வருடமே, செல்சி அணி பிரீமியர் லீக் வெல்ல உறுதுணையாக இருந்தார். எந்த இடத்தில இருந்தும், தனது அணி வீரருக்கு எளிதாக பாஸ் செய்யும் திறன் கொண்ட ஃபாப்ரிகாஸ், பிரீமியர் லீகின் சிறந்த மிட்பீல்டு வீரராக அறியப்பட்டார். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, ஸ்டோக் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில், பிரீமியர் லீக் போட்டிகளில் தனது 100வது அசிஸ்ட்டை பெற்றார். தான் கொடுத்த பாஸ் மூலம், தனது அணி வீரர் கோல் அடித்தால், அது ஒரு அசிஸ்டாக கணக்கிடப்படும். 293 போட்டிகள் விளையாடிய நிலையில், ஃபாப்ரிகாஸ் இந்த சாதனையை படைத்தார். இதற்கு முன், மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் ரையன் கிக்ஸ், 367 போட்டிகளில் 100 அசிஸ்டுகள் கொடுத்ததே சாதனையாக இருந்தது. 

2016ம் ஆண்டு ஃபாப்ரிகாஸ் படைத்த சாதனைக்கான விருது, நேற்று வழங்கப்பட்டது. "மிக வேகமான வீரரோ, வலுவான வீரரோ, உயரமாக குதிக்கும் வீரரோ நானில்லை. ஆனால், நான் படைத்த இந்த சாதனை, என் கால்பந்து வாழ்விலேயே நான் செய்த மிகப்பெரிய விஷயமாகும். என் பணியை நான் சிறப்பாக செய்ததால் தான் இது சாத்தியமானது" என்றார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close