மான்செஸ்டர் யுனைட்டட் மீண்டும் வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 06:14 pm
manchester-united-win-again

புதிய பயிற்சியாளரின் உதவியுடன், சிறப்பாக விளையாடி வரும் மான்செஸ்டர் யுனைட்டட் அணி, பிரீமியர் லீக் தொடரில் நியூகாஸிலை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4வது தொடர் வெற்றியை பதிவு செய்தது. 

பிரீமியர் லீக் தொடரில் மோசமாக விளையாடி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த மான்செஸ்டர் யுனைட்டட் அணி, பயிற்சியாளர் ஜோஸே முரினோவை பணியில் இருந்து நீக்கி, இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வீரர் சோல்சாரை பணியமர்த்தியது. அவர் அணிக்கு பயிற்சி அளிக்கத் துவங்கிய பின்னர், அசத்தலாக விளையாடி தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறது மான்செஸ்டர் யுனைட்டட். 

நேற்று நடைபெற்ற போட்டியில், நியூகாஸில் அணியுடன் மோதியது. இரு அணிகளும் தொடர்ந்து அட்டாக் செய்து பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இந்நிலையில், இரண்டாவது பாதியில், மாற்று வீரர்களாக லுக்காக்கு மற்றும் அலெக்சிஸ் சான்சஸ் ஆகியோர் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் நுழைந்த அடித்த சில வினாடிகளிலேயே, லுக்காக்கு கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து அட்டாக் செய்து விளையாடிய மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் இளம் வீரர் ராஷ்போர்டு, லுக்காக்கு மற்றும் சான்சஸ் உதவியுடன் மற்றோரு கோல் அடித்தார். 2-0 என தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்தது மான்செஸ்டர் யுனைட்டட்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close