ஆர்சனலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 05:42 pm
manchester-city-beat-arsenal-with-aguero-hattrick

பிரிமியர் லீக் கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல் மோதிய போட்டியில், நட்சத்திர வீரர் அகுவேரோ ஹேட்ட்ரிக் கோல்கள் அடிக்க, மான்செஸ்டர் சிட்டி 3-1 என வெற்றி பெற்றது. 

நடப்பு பிரீமியர் லீக் சாம்பியன்களான மான்செஸ்டர் சிட்டி, லண்டன் நகரை சேர்ந்த ஆர்சனல் அணியுடன் நேற்று மோதியது. போட்டி துவங்கிய முதல் நிமிடத்திலேயே, சிட்டி அணியின் அகுவேரா கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். சிட்டி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி விளையாடினாலும், ஆர்சனல் அணியின் கோஷியல்னி 11வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார்.

சிட்டி வீரர்கள் அசத்தலாக விளையாடி தொடர்ந்து கோல் வாய்ப்புகளை உருவாக்கி வந்தனர். முதல் பாதி முடியும் நேரத்தில், 44வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இரண்டாவது பாதியில், 61வது நிமிடத்தில் 3வது கோல் அடித்து, சிட்டி வெற்றி பெற உதவினார்.

இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மான்செஸ்டர் சிட்டி நீடிக்கிறது. ஆர்சனல் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close