மான்செஸ்டர் யுனைட்டட்டை வீழ்த்தியது ஆர்சனல்!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 04:01 pm
arsenal-beat-manchester-united

பிரீமியர் லீக் தொடரில், ஆர்சனல், மான்செஸ்டர் யுனைட்டட் அணிகள் மோதிய முக்கிய போட்டியில், அபாரமாக விளையாடிய ஆர்சனல் அணி, ஜாக்கா மற்றும் ஆபமயாங் அடித்த கோல்களின் மூலம் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில், புதிய பயிற்சியாளர்கள் தலைமையில் போராடி வரும் மான்செஸ்டர் யுனைட்டட் மற்றும் ஆர்சனல் அணிகள் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில் மோதின. இதில், மான்செஸ்டர் யுனைட்டட் அணி தொடர்ந்து பல வாய்ப்புகளை உருவாக்கி வந்தது. ஆனால், ஆட்டத்தின் போக்கிற்கு மாறாக, ஆர்சனல் அணியின் ஜாக்கா அடித்த ஷாட் சுழன்று செல்ல, யுனைட்டட் அணியின் கோல்கீப்பரை குழப்பி, கோலுக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து ஆர்சனல் 1-0 என முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து ஆர்சனல் பாதுகாப்பாக டிபென்ஸ் ஆட்டம் விளையாடியது. இரண்டாவது பாதியில் ஆர்சனலின் லாகசெட், பெனால்டி பாக்ஸுக்குள் பவுல் செய்யப்பட, ஆர்சனல் அணியின் ஆபமயாங் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். கடைசி வரை யுனைட்டட் அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. போட்டி 2-0 என முடிந்தது. 

போராடி வந்த மான்செஸ்டர் யுனைட்டட் அணி, புதிய பயிற்சியாளர் சோல்சாரின் கீழ் சிறப்பாக விளையாடி தொடர் வெற்றிகளை குவித்து வந்த நிலையில், முதன்முறையாக தோல்வியடைந்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து, பிரீமியர் லீக் பட்டியலில் யுனைட்டட் அணியை விட 2 புள்ளிகள் அதிகம் பெற்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது ஆர்சனல். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close