மான்செஸ்டர் யுனைட்டட் நிரந்தர பயிற்சியாளராக சோல்ஸ்ஜார் நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 06:41 pm
solskjaer-appointed-as-manchester-united-manager

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடும் பிரபல மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் நட்சத்திர வீரர் சோல்ஸ்ஜார், தற்போது நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்டுள்ள மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் பயிற்சியாளர் ஜோசே முரினோ கடந்த ஆண்டு இறுதியில் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் ஓலே கன்னார் சோல்ஸ்ஜார் நியமிக்கப்பட்டார். அதுவரை தொடர்ந்து தோல்வி அடைந்து மோசமான நிலையில் இருந்து வந்த மான்செஸ்டர் யுனைட்டட் அணி, சோல்ஸ்ஜாரின் வருகைக்கு பிறகு வெற்றி பெறத் துவங்கியது.

தொடர்ந்து வெற்றி பெற்று, பிரீமியர் லீக் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது யுனைட்டட். இதுபோக, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரிலும், பலம்வாய்ந்த பாரிஸ் அணியை வீழ்த்தி, காலிறுதி சுற்றுக்கு யுனைட்டட் முன்னேறியுள்ளது. இதைத்தொடர்ந்து, சோல்ஸ்ஜார் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். மான்செஸ்டர் யுனைட்டட் அணி இன்று வெளியிட்ட அறிவிப்பில், சோல்ஸ்ஜார் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக அவர் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close