ஸ்டார் இந்திய கிரிக்கெட் வீரர்களின் கியூட் மனைவிகள்!

  நந்தினி   | Last Modified : 17 Sep, 2018 12:24 am

stunning-wives-of-star-indian-cricketers

நம்மூரில் கிரிக்கெட்டிற்கு ரசிகர்களிடையே இருக்கும் ஆர்வத்தை போல வேறெந்த விளையாட்டிற்கு இருந்ததில்லை. மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களின் சிறந்த ஆட்டத்தால் மட்டும் அவர்கள் ரசிகர்களால் ஈர்க்கப்படுவதில்லை. களத்தில் அவர்களது ஆட்டத்தின் ஸ்டைலுக்கும், ரசிகர்கள் ஏராளம். கிரிக்கெட் வீரர்கள் மட்டும் இந்த லிஸ்டில் இருந்துவிடவில்லை. அவர்களை உற்சாகப்படுத்தும் அவர்களது மனைவிகள், தோழிகளும் ரசிகர்களால் கவரப்படுகிறார்கள். அவர்களாலும் கிரிக்கெட் போட்டிக்கு கூடுதல் கலைக்கட்டுகிறதை மறுக்க முடியாது. 

தங்களது கணவன்மார்கள், தோழர்கள் மைதானத்தில் விளையாடுவதை கண்டு ரசிக்கும் அதே நேரம் அவர்களை உற்சாகப்படுத்தவும் இவர்கள் தவறுவதில்லை. அதை பார்க்கும் நமக்கும் கொண்டாட்டமாக தான் இருக்கும். இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியை எதிர்நோக்கி இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர். அதே சமயம் அவர்களுடன் மனைவி, தோழிகளும் ஆர்வத்துடன் போட்டியை காண பயணத்திற்கு தயாராகி வருகின்றனர். 

தற்போது ஆசிய கோப்பையில் இடம் பெற்றுள்ள டாப் வீரர்களின் மனைவிகளை தெரிந்து கொள்வோம்:-

ரித்திகா சாஜ்தேஹ் சர்மா:

விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஆசிய கோப்பைக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா ஒரு உள்ளூர் போட்டியில் களமிறங்கினாள் கூட இவரது மனைவி ரித்திகாவை அங்கு காணலாம். கணவர் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியை நேரில் கண்டு உற்சாகப்படுத்தும் ரித்திகா, ரோஹித்தின் விளையாட்டு மேலாளராக பணி புரிந்தார். ஆறு வருட காதலில் இருந்த இந்த அழகான ஜோடி 2015ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தது. ரோஹித் விளையாடும் போது, இவரை ரோஹித்தை விட அதிகமாக பார்க்க முடியும். அதுவும் பிறந்தநாள், திருமண நாட்களில் ரோஹித்தின் ஆட்டம் வாணவேடிக்கை போல் அமையும். இந்த முறை அப்படி ஏதாவது ஒரு சுவாரஸ்யமான நாள் ரோஹித்துக்கு அமையுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். 

தீபிகா பல்லிகல்:

இலங்கையின் நிடாஹஸ் கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியை எவராலும் மறந்திருக்க முடியாது. எதிரணியை இந்தியாவின் வெற்றியை கொண்டாடும் அளவிற்கு இருந்தது அவரது ஆட்டம். இவர் தற்போது ஆசிய கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தில் சொல்லிக் கொள்ளும்படி அவரது ஆட்டம் இல்லை என்றாலும், இந்த தொடரில் அவரது ஆட்டம் பேசப்படும் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வாரும் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் மீது காதல் கொண்ட தினேஷ் கார்த்திக், அவரை 2015ம் ஆண்டு கரம் பிடித்தார். இருவரும் களத்திலும் அதிரடி காட்டும் இருவரும் நிஜத்தில் கூலான ஜோடியாக வலம் வருகின்றனர். 

ஆயிஷா முகர்ஜீ: 

இந்தியாவின் அதிரடி துவக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா முகர்ஜீ. தவானை விட 12 வயது மூத்தவராகவும், மூன்று குழந்தைகளுக்கு தாயாக  இருந்தாலும் தனது ஸ்டைல் மற்றும் அழகால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். 

சென்னுபல்லி வித்யா:

நீண்ட காலத்திற்கு பிறகு என்று சொல்வதை விட நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ராயுடு, இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிசிசிஐ-யையும் தன்னை திரும்பி பார்க்க வைத்தார். இதனால் இங்கிலாந்து தொடருக்காக இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் அந்த சந்தோசம் நீடிக்கவில்லை. யோ-யோ டெஸ்ட்டால் மீண்டும் ஒதுக்கப்பட்ட அவர், தற்போது ஆசிய கோப்பைக்கான அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். 2016ம் ஆண்டுக்கு பின் ஒருநாள் போட்டியில் களமிறங்க இருக்கும் ராயுடு, கல்லூரி தோழியான சென்னுபல்லி வித்யாவை 2009ம் ஆண்டு கரம் பிடித்தார். கிரிக்கெட் பிரியரான வித்யா, ராயுடுவுக்கு உறுதுணையாக இருக்கிறார்.  

சாக்ஷி சிங் தோனி:

மிகவும் கியூட்டான மனைவிக்காக விருது தோனியின் சாக்ஷிக்கு நிச்சயம் சேரும். அவருடைய ஸ்டைல் மற்றும் கியூட்னஸ் தோனியை விட அவரை பார்க்க வைக்கும். பள்ளி தோழி மற்றும் உறவினரான சாக்ஷியை தோனி, 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரது காதல் கதையை நாம் தோனியின் அன்டோல்ட் ஸ்டோரியிலேயே பார்த்து ரசித்திருத்துவிட்டோம். ஆனால் தற்போது இருவரையும் மிஞ்சும் அளவிற்கு 2015ம் ஆண்டு வந்துவிட்டால் ஸிவா. இப்பொது தோனி, சாக்ஷி எல்லாம் இல்லை ஸிவா தான் சமூகவலைத்தளத்தில் டாப். அவளுடைய கியூட்னஸ், சுட்டி தனம் அனைத்திற்கும் தோனியை காட்டிலும் ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்த அழகான குடும்பத்தை எப்போதும் நாம் மைதானத்தில் கண்டு ரசிக்கலாம். 

அனுஷ்கா சர்மா:

ஆசிய கோப்பைக்கான போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனுஷ்கா சர்மாவை ரசிகர்களால் பார்க்க முடியாதது வருத்தமே. இருப்பினும் சமீபகாலமாக இந்த ஜோடி தான் தலைப்புச் செய்தி. இவர்கள் தும்பினால் கூட ஸ்டேட்டஸ் தான். இளம் ஜோடியான இவர்கள் கடந்த ஆண்டு இறுதியில் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். விருஷ்காவை போன்று திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்பதே அனைவரது கனவாக உள்ளது. அப்படிப்பட்ட பிரம்மாண்ட திருமண விழாவை நடத்தியுள்ளனர் விராட் - அனுஷ்கா. இந்த சகாப்தத்தில் இவர்களின் திருமணம் தான் மிகவும் பெரியது மற்றும் வியப்புக்குரியதாக அமைந்திருக்கிறது. ஆசிய கோப்பையில் இல்லை என்றாலும், சமூக வலைதளத்தில் ரசிகர்கள் விருஷகாவை பின் தொடரலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.