கிங் கேப்டன், வாவ் ஹஸ்பண்ட், ஃபிட்நஸ் ஐகான்... கோலியிடம் கற்க வேண்டியவை! #HBDKohli

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 12:04 pm

things-we-have-to-learn-from-kohli-hbdkohli

தான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் விராட் கோலி. அவரது சாதனைகளை மற்றவர்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு ஒரு பக்கம் அவர் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். அதே வேளையில் கிரிக்கெட்டில் அவர் திறமையையும் தாண்டி கோலியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய சிறப்பம்சங்கள் நிறைய இருக்கின்றன. 

இன்று தனது 30வது பிறந்த நாளை கொண்டாடும் இந்திய கேப்டன் கோலியின் கொண்டாடப்பட வேண்டிய... நாமும் பின்பற்ற வேண்டியவை பற்றி பார்ப்போம்...

ஃபிட்டா இருக்கணும்:

கோலியின் ஆரம்ப கால புகைப்படங்கள் பார்த்தால் சப்பி சிக்ஸ், ரோஸி லிப்ஸ் என்று செம க்யூட் டீன் பையனாக இருப்பார். ஆனால் தற்போது கன்னத்தை காணோம் என்பது போல தாடை எலும்பு தெரிய இருக்கிறார். உடலை அத்தனை இறுக்கி வைத்திருக்கிறார். ஒரு விளையாட்டு வீரனுக்கு திறமை, மன திடம் தாண்டி உடல் தான் முதலீடு. ஓடி ஆடும் போதே சாதனைகளை புரிந்திட வேண்டும். அப்படி பார்த்தால் கோலி பல ஸ்போர்ட்ஸ்மேன்களுக்கு எடுத்துக்காட்டு.

இதுகுறித்து பேசிய கோலி, "ஒரு முறை நான் கண்ணாடியை பார்க்கும் போது... இப்படியே இருந்தால் வெற்றி என்பதே இருக்காது என்பதை உணர்ந்தேன்.அடுத்த நாளே மாற்றத்திற்கான வேலைகளை தொடங்கினன். பின்னர் அதுவே வழக்கமாகி விட்டது. முன்பை விட சுறுசுறுப்பாக உணர்கிறேன்" என்று கூறினார். 

குறைகள் அறிந்து சரி செய்ய வேண்டும்...

தனது விளையாட்டில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கும் வீரர் கோலி. இவரின் ஆட்டத்தை தொடர்ந்து கவனித்து வருபவர்களால் அதனை உணர முடியும். கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட தொடங்கிய போது சுழற்பந்தை எதிர்க்கொண்ட விதத்திற்கும் தற்போது அவர் சுழற்பந்துகளை துவம்சம் செய்யும் விதத்திற்கும் இடையில் இருப்பது தான் முன்னேற்றம். 

உன்னை நம்ப வேண்டும்

ஒன்றை நம்மால் செய்ய முடியாது என்று யோசித்துவிட்டால்... நிச்சயம் அதனை செய்யவே முடியாது. கோலி தன்னம்பிக்கையின் அடையாளம். இதுகுறித்து சஞ்சய் மஞ்ரேக்கர் ஒரு முறை பேசிய போது, "கோலி கடைசியாக இங்கிலாந்தில் விளையாடிய போது அவரது ஆவ்ரேஜ் 13 ஆக இருந்தது. தற்போது இங்கிலாந்தில் அவரின் ஆட்டத்தை நாம் பார்த்தோம். அடிலைட்டின் ராஜா போல ஆடினார். கோலியின் தன்னம்பிக்கை எப்போதும் இறங்கியதே இல்லை. அதுதான் அவரின் ஸ்பெஷல்" என்றார்.  

வந்தா ராஜாவா தான் வரணும்

யு19 உலக கோப்பையை வென்ற பிறகு பெறும் எதிர்பார்ப்போடு ஐபிஎல்லில் நுழைந்தார் கோலி. அப்போது ஆக்ரோஷத்தால் தனது சரிவை தானே எழுதினார். இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டாலும் அவரது ஆகரோஷம் கோலியின் முன்னேற்த்தை தடுத்துக்கொண்டே இருந்தது. பின்னர் மீண்டும் உள்நாட்டு போட்டிகளில் விளையாடிய கோலி, பிறகு மீண்டும் இந்திய அணியில் இணைந்தார். அவரது ஆக்ரோஷம் குறையவில்லை. ஆனால் அதுவே தனது வெற்றிக்கு உதவும் படி மாற்றினார். 

வெற்றியோ தோல்வியோ சண்ட செய்யனும்

Sledgingக்கிற்கும் இந்திய அணிக்கு பெரிய இடைவேளை இருக்கிறது. எதிரணியினர் குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடும் போது விளையாட்டில் பேசுவோம் என்று ஒதுங்கி செல்பவர்கள் இந்திய அணி வீரர்கள். ஆனால் அவற்றை மாற்ற களமிறங்கியர் கோலி. முன்னரே சிலர் இப்படி செய்திருந்தாலும் கோலி செய்யும் போது அது ஹீரோயிசமாக தான் பார்க்கப்பட்டது. பிரட் லீ, மிட்சல் ஜான்சன் தொடங்கி கம்பீர் வரை மோதிவிட்டார் கோலி. பவுண்டரி லைனில் நின்று ஃபீல்டிங் செய்வதை கூட ரசிகர்கள் கடினமாக்கிய நிலையில் அவர்களிடம் கோலி சில சைகைகள் காட்டியது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. ஆனால் அடுத்த கனமே களத்தில் சிக்சர்கள் பறக்கவிட்டு பேசியவர்கள் வாயை மூடச்செய்தார். 

வெற்றி எப்போதும் எல்லை இல்லை:

30 வயதிலும் வாழ்க்கையில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருப்பவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.கோலி தனது 30வது வயதை எட்டும் இன்றைய தினம், அவர் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக உள்ளார். டாஸின் போதே வெற்றித்தான் இலக்கு என்ற முகத்தோடு கோலி களமிறங்குவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் கோலிக்கு எப்போது வெற்றி என்பது இலக்கு இல்லை. அது நெடுந்தூர பயணத்தில் நடக்கும் நிகழ்வு. ஒரு வெற்றிக்கு பிறகு அதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருப்பது கோலியின்  ஸ்பெஷாலிட்டி. 2019 உலக கோப்பையும் தாண்டி கோலியின் தேடல் பல வெற்றிகளோடு தொடரும். 

தொடங்கி வைத்தவர்களை மறக்க கூடாது

கோலி விளையாட தொடங்கியது முதலே தொடர்ந்து சச்சினுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறார். இருவரும் வெவ்வேறு காலக்கட்டத்தில் விளையாடியவர்கள் என்பதால் இந்த ஒப்பீடுகள் எப்போது ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்ததே இல்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசிய கோலி, "அவரை பார்த்து தான் விளையாடவே தொடங்கினேன். அப்படி இருக்கையில் என்னை எப்படி அவரோடு ஒப்பிட முடியும்" என்றார். இது தான் கோலி. 

இதே போல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தற்போதைய ஃபார்ம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் தொடர்ந்து அவர் பக்கம் நின்று பேசி வருகிறார் கிங் கோலி.

வாவ்... ஹஸ்பண்ட்

கோலியும் நடிகை அனுஷ்காவும் காதலிக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியே வர தொடங்கிய காலக்கட்டத்தில் கோலி விளையாடும் போட்டிகளுக்கு செல்ல தொடங்கினார் அனுஷ்கா. அப்போது அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்த கோலி சில போட்டிகளில் சோபிக்கவில்லை. அனுஷ்கா தான் கோலியின் தோல்விகளுக்கு காரணம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேச தொடங்கினர். இது ஒரு கட்டத்தில் கோலியயை எரிச்சல் அடைய செய்தது. அப்போது Shame என்ற வார்த்தையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அனுஷ்கா தனக்கு எப்போதும் பலமாக தான் இருந்திருக்கிறார் என்று கூறினார் கோலி. அதனைத் தொடர்ந்து பல போட்டிகளுக்கு அனுஷ்கா சென்றிருக்கிறார். மேலும் பல போட்டிகளில் சதம் அடித்து அனுஷ்காவுக்கு முத்தங்களை பறக்கவும் விட்டார். அனுஷ்காவின் படங்கள் பற்றி புகழ்ந்து பேசுவது, அடிக்கடி பல ஊர்களுக்கு ட்ரிப் செல்வது என #couplegoalsகளை உருவாக்கி வருகின்றனர் கோலியும் அனுஷ்காவும். 

வெறி இருக்கணும்!

கோலி என்றால் என்ன என்று கேட்டால் வெறி என்பதே சரியாக இருக்கும். நாட்டிற்காக விளையாடுகிறோம் என்ற வெறியை விராட் கோலியிடம் நீங்கள் எப்போதும் பார்க்கலாம். அணியின் மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் தனியாக நின்று சதம் அடித்துக் கொண்டு இருக்கும் வீரர் கோலி. ஆனால் சதம் அடித்தும் அணி வெற்றி பெறவில்லை என்றால்... கோலிக்கு அது பல முறை நடந்திருக்கிறது. 

குறிப்பாக ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஒவ்வொரு முறை விளையாடும் போதும் எதிரணிக்கு பயத்தை கண்ணில் காட்டும் கோலியால் அந்த அணிக்கு ஒரு கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்பது சோக கதை. இதனாலேயே கோலி பல முறை கொண்டாட்டத்தை தவிர்த்திருக்கிறார். அதன் உச்சக்கட்டமாக தோல்விக்கு பின் கோலி அழும் காட்சிகளையும் பார்த்திருப்பீர்கள். காரணம் வெறி!

#HBDKohli

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.